V4UMEDIA
HomeNewsKollywoodகேஜிஎஃப் பாணியில் உருவாகும் கீர்த்தி சுரேஷின் தசரா

கேஜிஎஃப் பாணியில் உருவாகும் கீர்த்தி சுரேஷின் தசரா

நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் நானி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சியாம் சிங்க ராய் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இதை தொடர்ந்து அவரது அடுத்த படமாக நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள அன்டே சுந்தரானிக்கி என்கிற படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக தசரா என்கிற படத்தில் நடிக்கிறார் நானி. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

கேஜிஎஃப் படம் எப்படி தங்க சுரங்கத்தை மையப்படுத்தி உருவானதோ, அதேபோல இந்த படம் நிலக்கரி சுரங்கத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம். அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

Most Popular

Recent Comments