V4UMEDIA
HomeNewsKollywoodகதையின் நாயகனாக மாறிய கபாலி லிங்கேஷ்

கதையின் நாயகனாக மாறிய கபாலி லிங்கேஷ்

கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறையிலிருந்து வெளிவந்ததும் முதன்முதலாக தேடிச்செல்லும் நபராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் லிங்கேஷ். அதை தொடர்ந்து கஜினிகாந்த், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த லிங்கேஷ் தற்போது இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்

அதில் ஒரு படம் மாணவர்களின் கல்விக்கடன், அதன் பின்னால் இருக்கும் அரசியலை பற்றிய திரில்லராக, அதேசமயம் காமெடி கலந்த கதையாக உருவாகியுள்ள காலேஜ் ரோடு என்கிற படம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் என்பவர் இயக்கியுள்ளார்.

அதேபோல காயல் என்கிற இன்னொரு படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் லிங்கேஷ். சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும் அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் இந்த படம் உணர்வுபூர்வமாக பேசுகிறதாம்..

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் தமயந்தி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த காலேஜ் ரோடு படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் படம் நன்றாக இருக்கிறது என்றும் லிங்கேஷின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.

Most Popular

Recent Comments