நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இருந்து கடந்த பிப்-14ஆம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் யூட்யூப்பைபையே மிரள வைத்துள்ளது. சொல்லப்போனால் இதற்கு முன் வெளியான விஜய் பட பாடல், டீசர் போன்றவை வெளியான சமயத்தில் செய்த சாதனைகளை இந்த லிரிக் வீடியோ அசால்ட்டாக முறியடித்து இப்போதுவரை 200 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
அனிருத்தின் இசை, சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியது, விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள சில காட்சிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அனிருத்தும், ஜோனிதா காந்தியும் இணைந்து இந்த பாடலை பாடிய விதம் என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலை அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பார்க்கும் விதமாக இழுத்து வந்துள்ளது என்பதே இந்த அளவு ரீச் ஆனதற்கு முக்கிய காரணம்.
அதுமட்டுமல்ல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அவ்வளவு ஏன் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட இந்த அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.