நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரை நடிப்பது குறைவான படங்கள் என்றாலும் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கதையும் கதாபாத்திரமும் இருக்க வேண்டுமென செலக்டிவ் ஆக படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர், அதனால் தான் இத்தனை வருடங்களாக ரசிகர்களின் ஆதரவுடன் இன்னும் ஓடும் குதிரையாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது முதன் முறையாக காடுகளில் நுழைந்து இயற்கையையும் விலங்குகளையும் படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞராக கா என்கிற படத்தில் ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
கா என்றால் காடு என அர்த்தம். நாஞ்சில் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இன்னொரு முக்கியமான வேடத்தில் வில்லன் நடிகர் சலீம் கவுஸ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நிச்சயமாக பல திரில்லிங்கான சம்பவங்கள் இந்த படத்தில் இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இதில் ஆன்றியாவுக்கு சண்டை காட்சிகளும் இருகின்றதாம்.