நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ மிருகம் என்கிற படத்தில் தான் என்றாலும் அவரது ஒவ்வொரு படத்திலும் நமது பக்கத்து வீட்டு பையனை ஞாபகப்படுத்தும் விதமாக அனைவரின் மனதிலும் பதியும் கதாபாத்திரங்கள் இல்லையே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள கிளாப் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த அனைவரின் பாராட்டு மழையிலும் தற்போது நனைந்து வருகிறார் ஆதி.
இந்த படத்தில் கனவுகள் நொறுங்கிப் போன ஒரு ஓட்டப்பந்தய வீரராக நடித்துள்ளார் ஆதி. அப்படி தோல்வி கண்ட அவர் ஒரு பயிற்சியாளராக மாறி எப்படி வேறு விதமாக தன்னுடைய திறமையை நிரூபிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தை சமீபத்தில் திரையுலக நண்பர்களுக்கு ஆதி திரையிட்டு காட்ட, படம் பார்த்தவர்கள் படத்தையும் ஆதியின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இயக்குனர் பிருத்வி ஆதித்யா இயக்கியுள்ள இந்த படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.