Home News Kollywood ஆசனத்தை பயன்படுத்தி ஆசனம் செய்து அதிரவைக்கும் மாளவிகா

ஆசனத்தை பயன்படுத்தி ஆசனம் செய்து அதிரவைக்கும் மாளவிகா

சுந்தர்.சி டைரக்ஷனில் அஜித்துக்கு ஜோடியாக ஆரம்பமே அமர்க்களமாக உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. ஆனால் அதன்பின் சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தவர், திருட்டுப்பயலே படத்தின் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பி லைம்லைட்டுகள் வந்தார்.

அதன் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடல் மாளவிகாவை தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிய வைத்து விட்டது கூடவே சந்திரமுகியில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பும் தேடிவந்தது.

ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கிய மாளவிகா தற்போது பல வருடங்கள் கழித்து கோல்மால் என்கிற படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார்

இது ஒரு பக்கம் இருக்க தனது உடலை எப்போதும் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக உடற்பயிற்சிகளையும் விதவிதமான ஆசனங்களையும் செய்து வருகிறார் மாளவிகா. அதுமட்டுமல்ல அவற்றை தனது ரசிகர்களும் பின்பற்றி தங்கள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ளட்டும் என்கிற அக்கறையில் தன செய்கின்ற உடற்பயிற்சி மற்றும் ஆசனங்கள் குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்

அப்படி சமீபத்தில் உட்காரும் ஆசனமான நாற்காலி ஒன்றை பிடிமானமாக பிடித்தபடி கால்களை மேலே தூக்கி தலைகீழாக நின்றபடி ஒரு புதுவிதமான ஆசனத்தை செய்து அசத்தியுள்ளார் மாளவிகா. தற்போது இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.