தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சியின் முதல் படமான முறைமாமன் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கடந்த நிலையில் தங்களது திருமண நாளை ஊட்டியில் தற்போது சுந்தர்.சி இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் குஷ்பு.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள குஷ்பு, “அபோதிருந்து இப்போது வரை. என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கிறேன். இதற்கு மேல் எதுவும் கேட்டிருக்க முடியாது. இங்கே நாங்கள் எங்கள் 22 வது திருமண நாளைக் கொண்டாடுகிறோம். உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்க்கை ஆனந்தம். என் அன்பே. இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்.” என்று தனது கணவர் சுந்தர்.சி குறித்து பெருமிதம் பொங்க கூறியுள்ளார்

















