காக்கா முட்டை படம் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக மாறியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத்தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அவரை தேடி வர ஆரம்பித்தன. அதனால் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட கதையின் நாயகியாக நடிப்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த வகையில் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படம் ஒன்றிலும் நடிகர் அர்ஜுனுடன் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க என்கிற படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது லாக்கப் என்கிற படத்தை இயக்கிய ஜி சார்லஸ் என்பவரது இயக்கத்திலும் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் கருணாகரன், லட்சுமி பிரியா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது.