கடந்த சில மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது.. ஆமாம்.. அது என்ன கோல்டன் விசா..?
துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட 7 அரபு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு தங்களது ஆளுகைக்கு உட்பட்ட இந்த ஏழு நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்கவும் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்
இதன்படி பத்து வருட காலம் இந்த விசா செல்லுபடியாகும். இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அமலாபால், மீராஜாஸ்மின் உள்ளிட்ட சிலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முதல் நபராக பார்த்திபன் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இந்த கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.