V4UMEDIA
HomeNewsKollywood‘நான் நலமாக இருக்கிறேன்' விஜயகாந்த் ட்வீட்!

‘நான் நலமாக இருக்கிறேன்’ விஜயகாந்த் ட்வீட்!

துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து உயர் சிகிச்சைக்காக தான் அமெரிக்கா செல்லப் இருப்பதாக அண்மையில் விஜயகாந்த் அறிவித்திருந்தார். கடந்த மாதம் 25ம் தேதி வீட்டிலேயே தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி முடித்த விஜயகாந்த் கடந்த 31ம் ஒன்றாம் தேதி சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் படி உதவியாளர் அவரை தள்ளிக் கொண்டு வரும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அமெரிக்கா சென்ற பிறகு அவரது உடல்நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக் கொண்டு கெத்தாக விஜயகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Most Popular

Recent Comments