HomeNewsKollywoodகதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!

கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்!

இயக்குனர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகம் ஆவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

கார்த்தி இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்திற்கு ‘விருமன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் என்பதால் அவருடைய மகள் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேற்று நடிகர் சூர்யா அதிதி கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதை வெளியிட்டார். மேலும் “அதிதி ஷங்கருக்கு மிகவும் அன்பான வரவேற்பு! நீங்கள் அனைவரின் இதயத்தையும் வெல்லப் போகிறீர்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!! உன் வரவு நல்வரவு ஆகுக !!” என்று வாழ்த்தி வரவேற்றார். 

அதையடுத்து இயக்குனர் வசந்தபாலன் “கதாநாயகியாக அறிமுகமாகும் அதிதி ஷங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். 

ஷங்கரின் சிறிய குழந்தை இவ்வளவு வளர்ந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. பார்ப்பதற்கு அருமையாக உள்ளார். வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கோலிவுட் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அதிதி ஷங்கருக்கு வாழ்த்து மழை பொலிந்து வரவேற்று வருகின்றனர். 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments