HomeNewsKollywood83 வயதிலும் ஃபிட்னெஸ் ..ஃபிட் இந்தியா தூதரான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி!

83 வயதிலும் ஃபிட்னெஸ் ..ஃபிட் இந்தியா தூதரான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி!

ஓராண்டிற்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் FIT India சார்பில் விழிப்புணர்வு பணிகளை ஜிகே ரெட்டி மேற்கொள்வார்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஷால்.விஷாலின் தந்தை தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி. கடந்த வருடம் இவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடைய ரெட்டி, அவ்வப்போது தனது ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்துக் கொள்வார்.

83 வயதிலும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.இந்நிலையில் அவர்  FIT India அமைப்பின் தூதராக, Fit India அமைப்பின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அடுத்த ஓராண்டிற்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் FIT India சார்பில் விழிப்புணர்வு பணிகளை ஜிகே ரெட்டி மேற்கொள்வார்.இதனை நடிகர் விஷால் தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments