V4UMEDIA
HomeNewsKollywoodஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அத்துடன் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார் . மேலும் சமுத்திரகனி, மதுபாலா உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். வரும் 10ம் தேதி கங்கனா ரணாவத் நடத்த ‘தலைவி’ திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை புரிந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் வெளியாகும் தலைவி திரைப்படம் இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர் . திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இதையடுத்து நடத்திய பேச்சுவார்த்தையில் தலைவி திரைப்படம் 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. இதனால் எந்த பிரச்சனையும் இன்றி வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகிறது

Most Popular

Recent Comments