HomeNewsபெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 15வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது.

இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இதன்படி, சென்னையில் 15வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments