HomeNewsKollywoodவைரலாகும் அரண்மனை 3 புகைப்படங்கள் ! Exclusive Updates

வைரலாகும் அரண்மனை 3 புகைப்படங்கள் ! Exclusive Updates

‘அரண்மனை 3’ படத்திலிருந்து விவேக் இடம் பெற்றுள்ள எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

காமெடி படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் சுந்தர்.சி. அதே போல ஹாரர் ஜேர்னரிலும் தற்போது சிறந்த படங்கள் கொடுத்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார். அந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சுந்தர் சி தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஆர்யா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இந்தப் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன்னரே விவேக் மறைந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக அரண்மனை 3 படத்திலிருந்து எந்தவொரு அப்டேட்-ம் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது அரண்மனை 3 படத்திலிருந்து எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆர்யா முறுக்கு மீசையுடன் மிரட்டும் தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் நடிகர் விவேக் இடம் பெற்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் திடீரென மறைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. 

தற்போது அரண்மனை 3 படத்தில் விவேக் இடம் பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments