HomeNewsKollywood'சூர்யா 40' படத்தின் மிரட்டல் பர்ஸ்ட் லுக் வெளியானது!

‘சூர்யா 40’ படத்தின் மிரட்டல் பர்ஸ்ட் லுக் வெளியானது!

சூர்யா 40’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

நடிகர் சூர்யா நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு சூர்யா 40 படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். அதிலிருந்து படத்தின் பர்ஸ்ட் லுக் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

தற்போது சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா கையில் வாள் மற்றும் துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் பலரை துப்பாக்கி மற்றும் வாள் கொண்டு துவம்சம் செய்கிறார்.

இறுதியாக மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார். படம் கண்டிப்பாகவழக்கமான பாண்டிராஜ் படங்கள் போல் அல்லாமல் முழுநீள ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments