V4UMEDIA
HomeNewsபிரம்மாண்டமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரிaன் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து !

பிரம்மாண்டமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரிaன் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து !

இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் இன்று மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. 

பிரம்மாண்ட இயக்குனர் என்று புகழ்பெற்ற ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் உள்ளார். அதில் டாக்டராக உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை போன்று செட் அமைத்து ஐஸ்வர்யாவுக்கும், ரோகித்துக்கும் இன்று பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.

கொரானா பாதுகாப்பு கருதி மணமக்களின் பெற்றோர் மற்றும் மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டனர். சரியாக காலை 11.15க்கு மணமகன் ரோகித், மணமகள் ஐஸ்வர்யா கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார். இந்த திருமண  நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Most Popular

Recent Comments