HomeNewsKollywoodஅமெரிக்காவில் ரஜினிகாந்த்… பரிசோதனை முடிந்து விட்டதா? : வைரமுத்து வெளியிட்ட பதிவு!

அமெரிக்காவில் ரஜினிகாந்த்… பரிசோதனை முடிந்து விட்டதா? : வைரமுத்து வெளியிட்ட பதிவு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் ஷூட்டிங் முடிந்த பிறகு உடல் நிலையை பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து (ஜுன்.19) 3 மணி அளவில், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மயோ கிளினிக்கில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யா உடன் ரஜினிகாந்த் நடந்து வருவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவருக்கு பரிசோதனை முடிந்து விட்டதா? ரஜினிகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மருத்துவ பரிசோதனை நல்ல படியாக நடந்ததாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments