HomeNewsஇன்று பெட்ரோல், டீசல் விலை

இன்று பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.91 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 92.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments