HomeNewsKollywoodரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி!

ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. கடந்தமுறை ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார்.

அதன்பின்னர் அவர் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தபோது கொரோனா வந்துவிட்டது. இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை வந்ததால் அவர் செல்லமுடியவில்லை . தற்போது கொரோனா 3வது அலையும் வருகிறது என்ற தகவலால், அவர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்துள்ளாராம் .

ரஜினிகாந்த் தவிர, அவருடன் யார் யார் செல்கிறார்கள் , எந்த தேதி என்பது இன்னும் தெரியவரவில்லை .விரைவில் ரஜினியின் அமெரிக்க பயணம் எப்போது என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments