7G பிலிம்ஸ் சிவா ,ருத்ரதாண்டவம் படக்குழு & ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் K சிதம்பரம் சார்பில் சேலம் , நாமக்கல் ,தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்ட திரைப்பட பிரதிநிதியாளர்களுக்கு நிவாரண உதவி !
செய்தி அறிகையில் குறிப்பிட்டவை :
சேலம் , நாமக்கல் ,தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்ட திரைப்பட பிரதிநிதியாளர்கள் சங்கம் கவனத்திற்கு
கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் மற்றும் அமலில் உள்ள ஊரடங்கால் நமது சினிமா துறையை சார்ந்த பட பிரதிநிதிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் .இதனை மனதில் கொண்டு அவர்களுக்கும் மற்றும் போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 300 நபர்களுக்கு உதவும் வகையில் 7G பிலிம்ஸ் சிவா மற்றும் ருத்ரதாண்டவம் பட நிறுவனம் சார்பாக 25 கிலோ அரிசியும் , 10 கிலோ இட்லி அரிசியும் ,
ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் K சிதம்பரம் சார்பில் 17 அத்யாவசிய மளிகை பொருட்கள் உள்ளடங்கிய 10 கிலோ பேக் ஒன்று வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .
நாள்: 7 .6 .2021
நேரம் : காலை 8 மணி
இடம் : 7G பிலிம்ஸ் அலுவலகம் , சினிமா நகர் , சேலம் 9 .


























