Home News Kollywood ‘D43’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன்

‘D43’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் ‘D43′ படத்தின் படப்பிடிப்பு முதல் ஷ்டியூல் முடிந்துள்ளது.

இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். சத்ய ஜோதி தியாகராஜன் அவர்கள் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் ஷ்டியூல் படப்பிடிப்பு நேற்று முடிந்துள்ளது. முதல் கட்டமாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக இந்த படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.