V4UMEDIA
HomeNewsBollywoodபிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்..

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மரணம் – பிரபலங்கள் இரங்கல்..

பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 58.நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராஜிவ் கபூர். சுக்ரியா, ஜபர்தஸ்த், லவ்வர் பாய், ஆஷ்மான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ராஜிவ் கபூர் பிரேம்கிராந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.​

மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜிவ் கபூர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கரீஷ்மா கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் ராஜிவ் கபூர் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

Most Popular

Recent Comments