2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் “இன்று நேற்று நாளை”. தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படம் இது தான்.
அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் திரைக்கதை, வசனம் எளிய முறையில் மக்களுக்கு புரிந்தது. ரசிகர்கள் படத்தை மாபெரும் ஹிட் ஆக்கினார்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இந்த பாகத்திலும் கதாநயகனாக நடிக்க உள்ளார்.
அது மட்டுமின்றி முதல் பாகத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திலேயே மீண்டும் நடிக்க உள்ளனர்.இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொரோனா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் பூஜை இன்று (ஜனவரி 18) நடைபெற்றுள்ளது. பூஜை அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.