HomeNewsKollywood'மாஸ்டர்' படத்தின் முக்கிய அறிவிப்பு !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கண்டிப்பாக பொங்கல் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

Image

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முழுவதும் உள்ள திரையரங்கில் மாஸ்டர் டீஸர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீஸர் வெளியான சில நிமிடங்களிலே பல சாதனைகள் படைத்துள்ளது மாஸ்டர் தமிழ் டீஸர்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது. தமிழை போன்றே தெலுங்கு டீசெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குட்டி ஸ்டோரி தெலுங்கு மொழியில் வெளியிட உள்ளனர். தளபதி விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ள நிலையில் மாஸ்டர் படத்தினை U/A சேர்ட்டிபிகேட் வழங்கியுள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments