HomeNewsKollywoodகொரோனா குமார் கதையை கேட்டு பாராட்டிய மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் !!

கொரோனா குமார் கதையை கேட்டு பாராட்டிய மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் !!

‘கொரோனா குமார்’ என்று பெயரில் உருவாகும் புதிய படத்தை “இதற்கு தானே ஆசைப்பட்டை பாலகுமாரா” புகழ் கோகுல் இயக்குகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

“கொரோனா குமார்” படத்தின் டைட்டில் பிரமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் கோகுல் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் ‘ஜூங்கா’ , கார்த்தியை வைத்து “காஷ்மோரா” என பல படங்களை இயக்கியுள்ளார். 




  “கொரோனா குமார்” படத்தினை “சினிமா வாலா” பிக்சர்ஸ் சார்பில் சதீஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே குழந்தைகளை மையமாக வைத்து “சங்கு சக்கரம்” என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மற்றும் ஆர்ட்டிஸ்ட் மானேஜராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். “இதற்கு தானே ஆசைப்பட்டை பாலகுமாரா” , “சீறு” , “கொரில்லா” , “ஜூங்கா” , “கொலைகாரன்” போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் இவ்ளோ பெரிய படத்தை தயாரிப்பதே இவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என சொல்லலாம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா இல்லையா மற்றும் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.படத்தின் கதை மற்றும் இசை வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதையைக் கேள்விப்பட்ட தளபதி விஜய் யின் “மாஸ்டர்” இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments