V4UMEDIA
HomeNewsKollywood"காட்டேரி" படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் !!

“காட்டேரி” படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் !!

கொடிய வைரஸான கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாகவிருந்த “காட்டேரி” படத்தை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, பொன்னமலம், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், ஆத்மிகா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் “காட்டேரி”.

Image

இயக்குநர் டீ.கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காட்டேரி. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமேன் மற்றும் கவலை வேண்டாம் படங்களை இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Image

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி படம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Popular

Recent Comments