V4UMEDIA
HomeNewsMollywoodபிரபல நடிகரின் மகள் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு !

பிரபல நடிகரின் மகள் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு !

2002ம் ஆண்டு “நந்தனம்” என்ற மலையாள படத்தில் நடிகராக அறிமுகமானார். 2005ம் ஆண்டு கே.வி.ஆனந்த இயக்கிய “கனா கண்டேன்” படத்தில் வில்லனாக நடித்தாலும், இயக்குனர் பாக்கியராஜின் “பாரிஜாதம்” திரைப்படம் தான் இவரை தமிழில் பெரிதாக அடையாளப்படுத்தியது. அதன் பின் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உறுமி போன்று பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் வெறும் ஆறு கொடி ரூபாய் செலவில் உருவாகி வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஐம்பது கோடிக்கும் மேல் வசூல் சாதனையை எட்டியது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி நடந்தது அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக பிரித்திவிராஜ் நடிப்பில் “ஆடுஜீவிவிதம்” படம் மலையாளத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் பிருத்விராஜின் மகள் பெயரில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் 6 வயது மகள் அலாக்ரிதாவின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டதை அடுத்து பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா மேனன் ஆகியோர் கண்டு அதிர்ச்சியாகினர்.

மேலும் அந்த கணக்கை நீக்கவேண்டும் என அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments