HomeNewsMollywoodதயாரிப்பாளர் ஆகிறார் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் !

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார் கே.எஸ்.ரவிகுமார். சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், தளபதி விஜய், தல அஜீத், சரத்குமார், சூர்யா என பல முன்னணி பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கிய கே.எஸ் ரவிக்குமார் தற்போது தயாரிப்பாளராக உள்ளார்.

Image

கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. ரவிக்குமார் தயாரிக்கும் திரைப்படம் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் கொரோனா லாக்-டவுனில் திரைப்பட ரசிகர்களால் ஓடிடி-யில் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்பட்டது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற திரைப்படத்தில் சுராஜ், சோபின் ஷாஹிர், பார்வதி உள்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற கே.எஸ் ரவிக்குமார் தனது உதவியாளர் ஒருவரை இயக்குனராக்கி உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கே.எஸ் ரவிக்குமார் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments