தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான சிம்புதேவன், வெங்கட்பிரபு, பா.ரஞ்சித், எம்.ராஜேஷ் ஆகியோர் இணைந்து ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் ஓடிடி தளத்திற்காக உருவாக்க உள்ளார்கள்.
ஏற்கனவே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தற்போது ஆந்தாலஜி பக்கம் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது மேலும் நான்கு முன்னணி இயக்குனர்கள் ஆந்தாலஜி படத்தை இணைத்து இயக்க உள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ’விக்டிம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன் மற்றும் எம் ராஜேஷ் ஆகிய நால்வர் இணைந்து இயக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.















