பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்கள் என்றாலே மிக சுவாரஸ்யமாக இருக்கும். அதற்கு மிக முக்கிய காரணம், வாரம் முழுக்க வீட்டில் நடந்த சண்டை, வாக்கு வாதம் அத்தனையும் பஞ்சாயத்து செய்து யார் தரப்பு நியாயம் இருக்கிறதோ அதை “குறும்படத்துடன்” அதாவது ஆதாரத்துடன் நிரூபிப்பார்.
இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவில் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் கெத்தாக நடந்து வந்த உலக நாயகன் கமல் ஹாசன் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் இடையே நடந்த சண்டையை குறித்து பேசப்போகும் கமல் நிச்சயம் அதற்கான குறும்படத்தை போட்டுக்காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..


























