இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா மற்றும் “பிரேமம்” பட புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தள்ளிப் போகாதே”. இப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டான ‘நின்னு கோரி’ படத்தின் ரீமேக்காகும். அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘பூமராங்’ படத்தை ஆர்.கண்ணன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் இணைந்து ஆர்.கண்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். படத்தின் இசை வேலைகளை கோபி சுந்தர் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் “தள்ளிப் போகாதே” படத்தின் ட்ரெய்லரை இன்று ( அக்டோபர் 09 ) வெளியிட்டுள்ளார்.
Happy to release the trailer of @atharvaamurali‘s #ThalliPogathey, starring @anupamahere and my dear buddy @amitashpradhan
Produced & Directed by @Dir_kannanR https://t.co/JdsFTRs7rz#ThalliPogatheyTrailer— Anirudh Ravichander (@anirudhofficial) October 9, 2020


























