ரஜினி மக்கள் மன்றம் பஹ்ரைன் நாட்டின் சார்பில் இலங்கை நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தார். அவர் பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றத்தை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அவருடைய கோரிக்கையை ஏற்று பஹ்ரைன்ரஜினி மக்கள் மன்றம் அந்த பெண்மணி இலங்கை செல்வதற்காக விமான டிக்கெட்க்கு உண்டான செலவு 162தினார் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் (34000) மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.


அவர்கள் பஹ்ரைன் மன்ற காவலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்ததோடு நான் என் வாழ்நாள் முழுவதும் இந்த உதவியை மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்கள் .
