நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர்ஸ்டார் ரஜினி’யின் “பேட்ட” மற்றும் ‘தளபதி விஜய்’யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் “உப்பண்ணா” என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ” புஷ்பா” என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை “ரங்கஸ்தலம்” இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 5 மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் பிரபல நடிகை ரோஜா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சுமார் 5 வருடங்களுக்கு பிறகு நடிகை ரோஜா திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுக்கிறார்


























