ஜேம்ஸ் காஸ்மோ, பிரபல ஹாலிவுட் நடிகர். ப்ரவே ஹார்ட், டிராய், நார்னியா, கேம் ஆப் த்ரோன்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜெகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இவர் சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்
அதில் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் , இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் நான் கேட்ட முதல் கேள்வி ” இந்த படத்தில் எனக்கு நடன காட்சி ஏதும் உள்ளதா” அதற்கு கார்த்திக் இல்லை என்றார். ஆனால் படப்பிடிப்பின் போது, நானும் தனுஷும் ஒரு கேங் உடன் சண்டை போட்டதும், எங்களை அழைத்து செல்ல ஒரு சொகுசு கார் வரும். அப்போது நானும் தனுஷும் சந்தோஷத்தில் சின்னதாக நடனம் ஆடி கொண்டே காரில் ஏறுவோம். முதல் முறையாக ஒரு இந்திய படத்தில் நான் நடனம் ஆடியது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது.
என் மானேஜர் டீம் க்கு ஒரு நாள் அழைப்பு வந்தது. விசாரித்த போது இந்திய படம் என சொன்னார்கள். மிக ஆர்வமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டேன். அவர் லண்டன் வந்து கதை சொன்னார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து போனது. கதை சொன்ன விதமும், திரைக்கதையும் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அப்படத்தில் நான் நடிக்க முடிவு செய்தேன்.
இதற்கு முன் நான் கார்த்திக் சுப்புராஜின் “பீட்ஸா” படம் பார்த்தேன். ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியான திரைக்கதையை கண்டு ஆச்சரியப்பட்டேன். “ஜெகமே தந்திரம்” படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய விதம் உண்மையிலே பிரமாதம்.
தனுஷ் மிக சிறந்த மனிதர் மற்றும் நேர்த்தியான நடிகர். மிக கடினமான உழைப்பாளி, அவருடன் பணிபுரிந்தது சந்தோஷமாக உள்ளது. என்ன தான் பெரிய நடிகர் என்றாலும், அனைத்து நடிகர்களையும் சமமாக ட்ரீட் செய்வார். படத்தில் எனது ரோல் மிக பவர்புல் ஆனது. படம் வெளிவந்ததும் அது உங்களுக்கே புரியும் என்றார் .