V4UMEDIA
HomeNewsKollywoodரசிகர்கள் கொண்டாடும் யாரடி நீ மோகினி ! வெளிவந்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன !

ரசிகர்கள் கொண்டாடும் யாரடி நீ மோகினி ! வெளிவந்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன !

தனுஷ், நயன்தாரா நடிப்பில் 2008ம் ஆண்டில் வெளிவந்த படம் யாரடி நீ மோகினி. இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர் மித்ரன் ஜவஹர் இயக்கிய முதல் படம். இப்படம் முதலில் தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் Aadavari Matalaku Arthale Verule என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்தை அவரது உதவியாளர் தமிழில் ரீமேக் செய்தார். தெலுங்கை விட தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை RK Productions சார்பில் தனுஷின் சகோதரி விமலகீதா தயாரித்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் பட்டி தொட்டி என ஹிட் அடித்தன. மறைந்த முன்னாள் நடிகர் ரகுவரன் அவர்களின் கடைசி படமும் இதுவே.

படத்தின் மிக பெரிய பலமே தனுஷின் இயல்பான நடிப்பும், செல்வராகவனின் திரைக்கதையும் தான். தனுஷ் நயன்தாரா கெமிஸ்ட்ரியை விட தனுஷ் ரகுவரன் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்-அவுட் ஆனது. மிடில் கிளாஸ் அப்பா பையனாக அவ்ளோ எதார்த்தமாக நடித்திருப்பார்கள். முதல் பாதி காதல், அப்பா சென்டிமென்ட் என போகும், இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க பேமிலி சென்டிமென்டாக போகும். சரண்யா மோகன், கே.விஸ்வநாத், சுகுமாரி, கார்த்திக், கருணாஸ் என அனைவரும் தங்கள் நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் உடன் தனுஷ் மீண்டும் 2 முறை இணைந்தார். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் அனைவரும் கொண்டாடினர். தமிழகத்தில் மட்டுமே 200 நாட்கள் கடந்து வெற்றிநடை போட்டது. படத்தை வாங்கின அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. 2008ம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெற்ற டாப் 10 படங்களில் யாரடி நீ மோகினி க்கு உண்டு. இன்று படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. #12YearsOfBBYNM என்ற டேக்கை தனுஷ் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments