நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் இசைவெளியீட்டு விழா முடிந்ததும் தன அடுத்த படத்துக்காக தனுஷ் லண்டன் புறப்பட்டார். பெயரிடப்படாத இந்த படம் தனுஷ் நடிக்கும் 40 வது படமாகும் . இந்த படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் .படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் அவரை காண ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் .
நேற்று தனுஷ் ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ காட்சி ஒன்றை லண்டனில் இருந்து வெளியிட்டார் .
அவரை காண வந்த ரசிகர்கள் அனைவரையும் தனுஷ் சந்தித்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .