V4UMEDIA
HomeReviewKaappaan Movie Review

Kaappaan Movie Review

Review By :- V4u Media Team

Release Date :- 20/09/2019

Movie Run Time :- 2.45 Hrs

Censor certificate :- U/A

Production :- Lyca Productions

Director :- K.V.Anand

Music Director :- Harris Jayaraj

Cast :- Suriya, Mohanlal ,Arya ,Sayyeshaa , Samuthirakani , Thalaivasal Vijay , Poorna,Boman Irani ,Shankar Krishnamurthy

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, போமன் இரானி, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வெளிவந்த படம் ‘காப்பான்’. இப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் கதை இந்தியாவின் பிரதமராக சத்ய பிரகாஷ் வர்மா அவரை பாதுகாக்கும் எஸ்பிஜி காவலர் கதிரவன். பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட , அதற்கு காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை தேடி பிடித்து அழியாக்கிறார் கதிரவன்.

பிரதமராக மோகன்லால் நடிக்கிறார். அவரது வேடம் அவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. அவரை பாதுகாக்கும் எஸ்பிஜி அதிகாரியான கதிரவன் தான் நடிகர் சூர்யா. ஒரு கமர்சியல் ஹீரோவாக காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் திரில்லர் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்திற்கும் பொருந்தியுள்ளார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் அவரது கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது. மிகவும் விறுவிறுப்பாக போகும் படத்தில் துறுதுறு இளைஞனாக வந்து தனது நடிப்பால் வசீகரிக்கிறார் ஆர்யா.

சமுத்ரகனியின் நடிப்பு படத்திற்கு மிகவும் பக்க பலம். வாய்ப்பை பயன்படுத்தி தனது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் சாயீஷா. நாட்டு நடப்பு, அரசியல், சமுதாய பிரச்சனைகள் என அனைத்தும் உள்ளடக்கி படத்தினை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார் இயக்குனர் KV ஆனந்த்.

படத்தில் இடம் பெரும் ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை மிகவும் தெளிவாக காண்பித்துள்ளார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் அழகாக்கியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையில் முக்கியமான காட்சிகள் வேரூன்றுகிறது.

சூர்யாவின் நடிப்பு படத்தில் மிகவும் பேசப்படுகிறது, படங்களில் அமைந்திருக்கும் அவரது வசனங்கள் இன்னும் பிளஸ். சண்டை காட்சிகளின் ஸ்டண்ட், எஸ்பிஜி அதிகாரியாக அவரின் அதிகாரம் என ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ரசிகர்களிற்கு விருந்தளித்துள்ளது காப்பான்.

Most Popular

Recent Comments

Review By :- V4u Media Team Release Date :- 20/09/2019 Movie Run Time :- 2.45 Hrs Censor certificate :- U/A Production :- Lyca Productions Director :- K.V.Anand Music Director :- Harris Jayaraj Cast :- Suriya, Mohanlal ,Arya ,Sayyeshaa , Samuthirakani , Thalaivasal Vijay ,...Kaappaan Movie Review