பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமான சாருக் கான். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்றும் இளமையாக இருக்கும் முன்னணி நடிகரான இவருக்கு மூன்று குழந்தைகள். இவரின் கடைசி மகனான அப்ராம் கான் மீது இவருடைய ரசிகர்கள் தங்களது அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்ராம் கான் உடன் போட்டோ எடுப்பது என ரசிகர்கள் மத்தியில் சாருக்ஹ் கானின் மகன் அப்ராம் கானிற்கு என தனி கூட்டமே இருக்கிறது. பள்ளி மழலை மாறாத இவருடன் அண்மையில் சாருக் கானின் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினர். இருப்பினும் அப்ராம் கானிற்கு அந்த சமயம் புகைப்படம் எடுக்க விரும்பாததால், அந்த கோவத்தில் அவருடன் இருக்கும் செக்யூரிட்டியிடம் அந்த கோபத்தை காட்டியுள்ளார். சிறு பிள்ளை இது போன்று நடந்து கொண்டது மக்களிடம் இவர் மேல் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


























