தனது ஒவ்வொரு படங்களிலும் மாறுப்பட்ட நடிப்பினை வெளிப்படுத்துபவர் முன்னணி நடிகர் தனுஷ். அசுரன் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளார். வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்திருக்கும் படம் ‘அசுரன்’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் நான்காவது படம் இது. ஜி.வி.பிரகாஷ் , தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போவின் மூன்றாவது படம் இது. ‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார், இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இப்படத்தில் அறிமுகமாகி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அபிராமி, டீஜே அருணாசலம், பிரகாஷ் ராஜ், பசுபதி, யோகி பாபு, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், கென் கருணாஸ் மற்றும் பவன் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், எடிட்டிங்கை ராமர் கையாண்டுள்ளனர். இந்த படத்தின் கலைஇயக்கத்தை ஜாக்கி செய்துள்ளார்.
சண்டை பயிற்சியை பீட்டர் ஹெய்ன் கையாண்டுள்ளார். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ‘கத்தரி பூவழகி’ மற்றும் ‘பொல்லாத பூமி’ என்ற இரண்டு பாடல்களும் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ட்ரைலர் செப்டம்பர் 8 அன்று வெளியானது. ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த டீஸர் இதுவரை 2.4 மில்லியன் வியூஸ்களை தாண்டியுள்ளது.


























