பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அக்ஷய் குமார் கடைசியாக மிஷன் மங்கலில் படத்தில் நடித்தார். இவருடன் வித்யா பாலன், நித்யா மேனன், டாப்ஸி பன்னு, கீர்த்தி குல்ஹாரி, சோனாக்ஷி சின்ஹா, ஷர்மன் ஜோஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெகன் சக்தி எழுதி இயக்கியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவர் தனது வரவிருக்கும் அடுத்த படத்தினை குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
தனது த்விட்டேர் பக்கத்தில், “எனது பிறந்தநாளில், எனது முதல் வரலாற்றுப் படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! அவரது வீரம் மற்றும் மதிப்புகளை நான் எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் தாழ்மையுடன் இருக்கிறேன்- சாம்ரத் பிருத்விராஜ் சவுகான், எனது மிகப்பெரிய படங்களில் ஒன்றான # பிருத்விராஜ்.”
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இப்படம் தீபாவளி 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் சவுகான் சஹமனா துணிச்சலான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் நாட்டை ஆக்கிரமிக்க முயன்றபோது முயிஸ் அட்-தின் முஹம்மது கோரி மற்றும் அவரது பாரிய இராணுவத்திற்கு எதிராக போராடினார்.