Home News Kollywood செப்டம்பர் 6ல் ENPT ரிலீஸ், மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!!

செப்டம்பர் 6ல் ENPT ரிலீஸ், மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!!



மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கென் ஸ்காட்டின் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிரி படத்தின் மூலம் திரையில் காணப்பட்டார். தற்போது இவர் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Image

மறுபுறம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இவரது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரசிகர்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம்.படத்தின் டீஸர் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. படத்தின் வெளியீடு சிறிது காலமாக தாமதமாகிவிட்டது.

இறுதியாக ரசிகர்களுக்கான இந்தப் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது, இந்த ட்ரைலரை படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். படம் செப்டம்பர் 6 திரைக்கு வருகிறது.

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் தர்புகா சிவாவின் இசையும், ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவும் கையாண்டுள்ளனர்.