HomeNewsMollywoodநிவின் பாலி -நயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் ட்ராமா' படத்தின் டீஸர் வெளியாகிறது!!

நிவின் பாலி -நயன்தாராவின் ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ படத்தின் டீஸர் வெளியாகிறது!!



லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடைசியாக ‘கொலையுதிர் காலம் படத்தில்’ நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’. இந்தப் படத்தில் இவர் நிவின் பாலியின் ஜோடியாக நடிக்கிறார்.

Image

நயன்தாரா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள படங்களுக்கு திரும்பினார். ‘லவ் ஆக்சன் ட்ராமா’ படத்தை நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார்.

‘லவ் ஆக்சன் டிராமா’வின் டீஸரை புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மகன் பிரணவ் மோகன்லால் ஆகியோர் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆன இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் நகைச்சுவையான இந்தப் படம் பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணாவும் நடித்துள்ளார். ஓனம் அன்று இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments