பெண்களுக்கு குரல் கொடுக்கும் சின்மய் ஸ்ரீபாதா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பிக் பாஸ் 3 குறித்து அவர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
மூத்த நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ். ஞாயிறு அன்று நடந்த எபிசோட் குறித்து சின்மயி தனது கருத்துக்களை தெரிவித்தார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸின் எபிசோடின் வீடியோ கிளிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த சின்மயி , கமல்ஹாசன் அவர்களால் ஒரு மோசமான கருத்தை எவ்வாறு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்று கருது தெரிவித்துள்ளார்.
“ஒரு தமிழ் சேனலில் இவர் பெருமையுடன் அறிவித்தது, பொது பேருந்து போக்குவரத்தில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் கருத்தை விவரிக்கும் போது. எப்படி பார்வையாளர்கள் அதற்கு கைதட்டுகளும் பாராட்டுகளும் தருகின்றனர்” என்று அவர் எழுதினார்.
மேலும், அதன் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் போது பெண்களைப் இது போன்று கல்லூரி படிக்கும்போது செய்ததாக குறிப்பிட்டார். இது போன்ற ஒரு அனுபவத்தை அவர் பகிரும் போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் இது குறித்து கருது தெரிவித்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
“நான் கல்லூரியில் படித்தபோது இது போன்று நடந்துகொண்டேன்” என்று சரவணன் ஒப்புக்கொண்டார், பார்வையாளர்கள் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது ஏற்புடையதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஒரு சமூக ஊடகப் பயணியர் கோத்தாய், சின்மயி பதிவிற்கு பதிலளித்துள்ளார். கமல்ஹாசன் உண்மையில் இந்த அறிக்கையை கண்டித்ததாக சுட்டிக்காட்டினார், ஆனால் சின்மயி உறுதியாக அதை ஒப்புக்கொள்ளவில்லை. தனது நிலைப்பாட்டிலிருந்து விலகாமல், சின்மயி, “கண்டனம் அடுத்த நொடியில் நடந்திருக்க வேண்டும்.” என்று கூறுகிறார்.
https://www.instagram.com/p/B0bsGEmnAM5/?utm_source=ig_web_copy_link
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்ளும். அந்த வகையில் இந்த வாரம் நடந்த இந்த நிகழ்விற்கு கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும், நகைச்சுவையாக எடுத்து கொள்வதற்கு இதில் எதுவும் இல்லை என்பதும் சின்மயின் கருத்து.
நேற்று ஜூலை 29ஆம் தேதி நடந்த பிக் பாஸில், பிக் பாஸ் சரவணனை அழைத்து இதுபோன்ற கருத்துக்களை கூறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிவுறுத்தியதால். சரவணன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடபட வேண்டிய விஷயம்.