HomeNewsKollywoodActor Atharva untitled project Direction by Kannan

Actor Atharva untitled project Direction by Kannan

அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. சென்னையில் 15 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளது.

“அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். ரொமான்டிக் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் வெளியிடப்படவுள்ள இந்த பெயரிடப்படாத படம் அனைவராலும் ரசிக்கப்படும், குறிப்பாக குடும்பங்கள் இந்த படத்தை ரசிப்பார்கள்” என நம்பிக்கையுடன் முடித்தார் இயக்குனர் கண்ணன்.

இந்த படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.கண்ணன் எழுதி இயக்கும் இந்த காதல் திரைப்படத்துக்கு கூடுதலாக வலு சேர்க்கிறார் வசனகர்த்தா கபிலன் வைரமுத்து. எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மசாலா பிக்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments