HomeReviewA1 Tamil Review

A1 Tamil Review

Review By :- V4uMedia Team

Release Date :- 26/07/2019

Movie Run Time :- 2 Hrs

Censor certificate :- U

Production :- CircleBox Entertainment

Director :- Johnson K

Music Director :- Santhosh Narayanan

Cast :- Santhanam Tara Alisha Berry Rajendran Manohar Swaminathan Saikumar Yatin Karyekar Jayasurya Mayilsamy

நடிகர் சந்தானம் நடித்து பவெளிவந்திருக்கும் படம் அக்யூஸ்ட் நம்பர் 1. வழக்கம்போல் வேலையில்லாமல் ஏரியாவில் ஜாலியாக நக்கலடிக்கும் ஒரு கதாநாயகன், ஐயங்கார் வீட்டு பெண்ணாக வரும் கதாநாயகி. இவர்கள் இருவரும் காதலித்து கரம் பிடிப்பதே கதை. படத்தின் மெயின் கான்செப்ட் காமெடி.

A1 movie movie stills

காமெடி படத்துக்கு பிளஸ் காமெடி வசங்களும் டைமிங்கும் தான். அந்த விதத்துல ஹீரோ சந்தானம் இந்த படத்துக்கு சரியா பொருந்தியிருக்காரு. சந்தானத்தின் நகைச்சுவையும் நையாண்டி பேச்சும் படத்தின் பிளஸ். அசால்ட்டான பாடி லாங்குவேஜ், டைமிங் காமெடினு படம் முழக்க சிரிக்க வைக்கிறார் சந்தானம். இடைவேளைக்கு பிறகு காமெடியில் எம்.எஸ். பாஸ்கர் சந்தானத்திற்கு சமமாக நகைச்சுவை செய்வது சிறப்பு.

Related image

வட இந்திய ஹீரோயின் தாராவிற்கு இது முதல் படம், தமிழ் தெரியாதவர் என்றாலும் கொடுக்கப்பட்ட வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த படத்தில் டைகர் தங்கதுரை, டோனி, சாய்குமார், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் என நகைச்சுவை நாயகர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர்.

காமெடி படத்திற்கேற்ப இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும் அவர்களது வேலையை சரிவர செய்திருக்கின்றனர். காட்சிகளை சரியாக இணைத்து சுவாரசியப்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.

படத்தில் ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை நிறைந்ததாக உள்ளதால் திரையரங்கம் அதிரும் அளவிற்கு சிரிப்பலைகளால் மூழ்கிவிட்டது. சில சீரியஸான காட்சிகளில் நகைச்சுவை கொண்டுவந்திருப்பதும் சுவாரசியம். நகைச்சுவை விருந்தாக இந்த படம் அமைந்திருக்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 26/07/2019 Movie Run Time :- 2 Hrs Censor certificate :- U Production :- CircleBox Entertainment Director :- Johnson K Music Director :- Santhosh Narayanan Cast :- Santhanam Tara Alisha Berry Rajendran Manohar Swaminathan Saikumar Yatin Karyekar...A1 Tamil Review