பாகுபலி இரண்டாம் பாகம் வெற்றியை தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்பை அதிகரிக்க செய்தது. சுஜித், இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை வம்சி மற்றும் ப்ரமோட் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் செய்துள்ளார்.
இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர், இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி VFX தாமதத்தினால் ஆகஸ்ட் 30 என மாற்றப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் படத்தின் தேதி மாற்றப்பட்டதும் நல்லது தான். ஏனெனில் சாஹோ ஒரே நேரத்தில் 4 மொழிகளில் உருவாக்கப்படுகிறது – இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம். பாலிவுட்டில் ஆகஸ்ட் 15 அன்று 3 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. சாஹோ படம் தள்ளிப்போனதும் ஒரு விதத்தில் நல்லது தான்.
புகழ்பெற்ற இந்திய படமான சாஹோவில் ஜாக்கி ஷிராஃப், நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா, அருண் விஜய், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் சர்மா, சுப்ரீத், லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.