அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தரியங், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், அர்ஜூன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தீரன் மற்றும் சதுரங்க வேட்டை புகழ் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில், படம் பற்றிய சமீபத்திய அப்டேட், ஈடிஎம் ட்ராக் எனப்படும் காலம் பாடல் லிரிக் வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை அலிஷா தாமஸ் மற்றும் யூனோஹூ ஆகியோர் பாடியுள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோகுல் சந்திரன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. ஜூலை மாத இறுதியில் ரிலீஸ் ஆகுகிறது இந்த படம்.