பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், தனது வரவிருக்கும் படமான Dabangg 3 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், இதில் சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான் மற்றும் மஹே கில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கிடையில், தனிப்பட்ட முறையில், நடிகர் தனது சக நடிகர்களுடன் நேரம் செலவிடுவார் என்பது தெரிந்த உண்மை. சமீபத்தில் நடன வகுப்பாக தன் வீட்டை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நடன இயக்குனர் பிரபுதேவா மற்றும் சுதீப் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் இருந்ததை பற்றி அவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட நடிகர், 1994 தமிழில் ஹிட் கொடுத்த காதலர் படத்தில் இடம் பெற்ற ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதில் நடன மாஸ்டரான பிரபுதேவாவிலிருந்து, சல்மான் கான், கிச்சா சுதீப் மற்றும் சஜீத் நாட்டாவாலா ஆகியோர் சேர்ந்து நடனமாடுகின்றனர்.
https://www.instagram.com/p/BztSlvyFWLx/?utm_source=ig_web_copy_link
பிரபுதேவா தபாங் 3 படத்தை இயக்குகிறார், இந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பெரிய திரைகளில் ஹிட் அடிக்க இருக்கிறது இந்த படம். சல்மான் கான் மற்றும் அரபாஜ் கான் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தபாங் திரைப்பட தொடரின் மூன்றாவது பகுதியாக அமைந்துள்ளது.