HomeNews"நான் இந்த படத்தில் 'ஏ' சான்றிதழைப் பெறுவேன் .." - ரகுல் ப்ரீத் சிங்கின் அடுத்த...

“நான் இந்த படத்தில் ‘ஏ’ சான்றிதழைப் பெறுவேன் ..” – ரகுல் ப்ரீத் சிங்கின் அடுத்த டீஸர்!!

ரகுல் ப்ரீத் சிங் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தோன்றியவர். தற்போது இவர் தென்னிந்தியா நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனாவுடன் இணைந்து இயக்குனர் ராகுல் ரவீந்திரனின் ‘மன்மதுடு 2’ இல் நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். வெண்ணிலா கிஷோர், லட்சுமி மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.


Related image

நாகார்ஜுனாவின் மன்மததுடு 2 இன் இரண்டாவது டீஸர் வெளியிட்டுள்ளனர், இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரமான அவந்திகாவை அறிமுகப்படுத்தும் டீசர் தான் இது. இந்த டீசரில் இவர் மிகவும் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறார். மன்மத்துடு 2 என்பது 2002 ஆம் ஆண்டு ரோம்-காம் மன்மதுடுவின் தொடர்ச்சியாகும், இதில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் டீஸரை வெளியிட்டனர், இதில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம், காஸநோவா என்ற பாத்திரம் இருந்தது. மன்மத்துடு 2வில் நாகார்ஜுனாவுடன் அவரது மருமகள் சமந்தா அக்கினேனி,ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், மனம் எண்டர்பிரைசஸ், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் இசையை சைதன் பரத்வாஜ் இசையமைக்கிறார், எம். சுகுமார் எடிட்டிங் துறையை கையாளுகிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments